Menu

அம்பிகையை சரணடைந்தால்

0 Comments

Buvaneswariஅண்ணே வண்ணக்கம்ணே !
கிரகங்களுக்கு டேக்கா, ஸ்ரீ அம்மன் சத நாமாவளி பொருள் விளக்கம், எமனுக்கு டேக்கா இதுல எதை எழுதறதுன்னு இன்னம் டிசைட் பண்ணல.
கொஞ்சம் கொஞ்சமா நான்  என் செயல்களை சுஜாதா கதையில் போல “செலுத்தப்பட்டது போல்” தான் உணர்கிறேன். புத்தி ஸ்வாதீனம் அற்று தான் செயல்படுகிறேன். புத்தி பராதீனம் ஆகிருச்சு  போல.
இகம்-பரம்னு ரெண்டு வார்த்தைகள். இகம்னா படிப்பு,வேலை,கண்ணாலம்,குழந்தை ,குட்டி மாதிரி லோக்கல் சமாசாரங்கள். பரம்னா ? ஐ.எஸ்.டி கால் ?
தெலுங்குல “பராயிவாரு” ன்னா வெளி ஆட்கள். பரமன் =வெளி ஆள்? உள்ளே இருக்கிற ஆள் (ஈகோ) கழண்டு கிட்டா வெளி ஆள் வந்து ஆட்டம் போடுவாரு போல.
இன்னைக்கு ராத்திரி எப்படியும் தூக்கம் இல்லை.தெரிஞ்சு போச்சு.ஒளுங்கு மருவாதியா நாலு ஜாதகத்துக்கு பலன் பதிவு பண்ணிட்டா நாளைக்கு கொஞ்சம் ப்ரசர் குறையும்.ஆனால் மறுபடி மறுபடி மைண்ட் பதிவுக்கே பைபாஸ் ஆகுது.
செரி..ஆரோ அடுத்த பதிவை சின்சியரா எதிர்ப்பார்த்து “தாட்” கொடுத்துக்கிட்டிருக்காய்ங்கன்னும் வச்சிக்கலாம்.
உங்களை பொருத்தவரை மேற்படி மூன்றும் வெவ்வேறு விஷயங்கள். ஆனா  மேற்படி 3 தொடர்களும் ஏறக்குறைய ஒரே மேட்டரை  டார்கெட் பண்ற ஐட்டங்கதான் .
கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கிறது பெரிய விஷயமே இல்லை. ஏன்னா நாம கிரகங்களை எதிர்த்து புரட்சி பண்ணலாம்னுல்லாம் சொல்ல வரலை. சமூக,குடும்ப வாழ்க்கை பாதிக்காம கிரகங்கள் நமக்கு “பல்ப்” கொடுக்க இடம் பண்ணி தரோம்.
என்னைக்கோ ஒரு நாள் ஹோல்சேலா எஃபெக்ட் பண்ணாம ரீட்டெய்ல்ல எஃபெக்ட் பண்றதுக்கு வழி விடறதை தான் சொல்றம்.
ஆக கிரகங்களுக்கும் – கிரகங்களுக்கு பணிவதன் மூலம் அவற்றை படைத்தவனுக்கும்  பயப்பட/பாச்சா காட்ட/டேக்கா கொடுக்க கத்து தரம். (கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்)
அவனருளாலே அவன் தாள் வணங்கிங்கறாப்ல – பீஷ்மரை போட்டு தள்ள பீஷ்மரையே ஐடியா கேட்டாப்ல – ஆத்தாளுக்கும் /அவள் படைச்சு நிலை பெற செய்த கிரகங்களுக்கும் டேக்கா கொடுக்க அவளையே சோர்ஸா உபயோகிச்சிருக்கம்.
இந்த சூட்சுமம்லாம் நமக்கு ஸ்பார்க் ஆக காரணம் ஆத்தாதேன். சோசியம் கத்துக்க ஆரம்பிச்ச சில மாசங்கள்ளயே நம்ம ஜாதகத்துல சிவசக்தியோகம் இருக்குன்னு படிச்சுட்டு கச்சா முச்சான்னு சிவனையும் -சக்தியையும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டம்(1989)
என்னடா இவனோட பெரிய இமிசையா போச்சுன்னு கொஞ்சம் சோசியம் -கொஞ்சம் பரிகாரம்னு பொரிகடலை மாதிரி கொடுத்து ச்சூ காட்டி விட்டுட்டாய்ங்க.
அங்கருந்து ஒரு 20 வருசமா பொரிகடலை வியாபாரம்  நடந்துக்கிட்டிருந்தாலும் கடந்த அஞ்சுவருசமா தூள் பறக்குது.(பைசா புரளுது பாஸூ) .மொத 15 வருசம் ஃபீல்ட் ஸ்டடி, ஒரு மெகா சர்வே மாதிரி வச்சுக்கிட்டா – இந்த அஞ்சுவருசம் ஆஃபீஸ்ல உட்கார்ந்து  அந்த கன்டென்ட்ல இருந்து ஜூஸ் எடுத்துக்கிட்டிருக்கம்.
அந்த ஜூஸ் தான்  பதிவுகளா வந்துக்கிட்டிருக்கு.
சோசியம் சூப்பரு. அதை விட கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கிற சமாசாரம் சூப்பரு. அதைவிட இந்த வித்தைய அசால்ட்டா தூக்கி கொடுத்த ஆத்தா சூப்பரோ சூப்பரு.
தெலுங்குல ஒரு பழமொழி உண்டு ” வட்டிஞ்சே வாடு மனவாடைதே ஏ பந்தைதே ஏமுந்தி” அதாவது பரிமாறுகிறவன் நம்மாளா இருந்தா எந்த பந்தியா இருந்தா என்ன?
சர்வர் நம்மாளா இருந்தா பெருசா என்ன நடந்துரும்? ஒரு ப்ளேட் சாம்பார் சாஸ்தி கிடைக்கும். இந்த கிரகங்கள் தான் சர்வர்கள். பின்னே கடவுள் யாரு? ஹோட்டல் ஓனர்.  நமுக்கு ஓனரையே கரெக்ட் பண்ற வித்தை தெரிஞ்சுட்டா சர்வர்களோட என்ன வேலை?கிரகங்களுக்கு ,மரணத்துக்கு டேக்கா கொடுக்கறதெல்லாம் ஆத்தாவ கரெக்ட் பண்ணிட்டா  ஜுஜுபி மேட்டர் ஆயிரும்.
நாமி -நாமம்னா பெயருக்குடையவன்-பெயர்னு அருத்தம். ரெண்டுத்துக்கும்  வித்யாசமே கடியாதுங்கறான்.
சத நாமாவளியில ஒன்னில்லை ரெண்டில்லை 100 நாமா வருது .  இதுகளோட அர்த்தத்தை ஒரு குன்ஸா தெரிஞ்சு /மனசுல பதிச்சு அப்பப்போ ஞா வர்ரதை அப்பப்போ ரீகலெக்ட் பண்ணிக்கிட்டே இருந்தா போதும் கிரகம் -மரணம்லாம் பக்கத்து தெருவரைக்கும் கூட வராது.
ஆகவே நாளையிலருந்து ஸ்ரீ அம்மன் சத நாமாவளி பொருள் விளக்கத்தை பார்க்கலாம்.ஓகேவா உடுங்க ஜூட்

print

1,006 total views, 1 views today

Tags: , , ,

1 thought on “அம்பிகையை சரணடைந்தால்”

  1. sakthivel says:

    amma thaane ellaam…
    amma namma pakkam irundhaa.. yaar entha pakkam irundha nammakkenna? entha
    ammavukkum than kunju pon kunju illayaa?
    Ellorum ambigai padam paNivom!! aval madiyil yaarum nammai asaikka mudiyathu.. allavaa?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *