Tags      

Categories  Tamil Horoscope அனுபவஜோதிடம் அரசியல்

ராமேஸ்வரமும் -சனேஸ்வரமும்

49X49 MODI
அண்ணே வணக்கம்ணே !
எதுவும் மாறும்  – எந்த பிரச்சினையும் தீரும்னு பலரும் ( நான் உட்பட)  உறுதியா நினைக்கிறோம்.அதையே சொல்றம்.
நான் பல காலமா சொல்லிட்டு வர்ர மேட்டரு ஜெவும் -கலைஞரும் உட்கார்ந்து  தங்கள் காலத்துலயே திமுக -அதிமுக வை இணைக்க பேசனும். கு.பட்சம் மனம் விட்டு பேசி ஒரு பத்து மேட்டர்லயாச்சும் இணைஞ்சு செயல்படனும். இந்த விஷயங்கள்ள நோ பாலிட்டிக்ஸ்.
இன்னைக்கு உதட்டளவுலயோ -உள்ளபடியோ ரெண்டு பேரும் நோ காங்கிரஸ் -நோ பி.ஜே.பின்னு செயல்பட்டுக்கிட்டு வர்ராய்ங்க. சந்தோசம்.
இதையே “பேசி வச்சுக்கிட்டு ” செய்தா எவ்ளோ நெல்லாருக்கும். அட ஜஸ்ட் பத்து  கூட வேணாம் அஞ்சு மேட்டருல ஒத்திசைவோட செயல்படலாம்ல?
1.மீனவர் பிரச்சினை -கச்சத்தீவு-  இலங்கை தமிழர் பிரச்சினை
2.காவிரி -முல்லை பெரியாறு பிரச்சினை
3.மின்சாரம் -மது விலக்கு -இலவசங்கள்
4.அணு மின்சாரம், எரிவாயு குழாய் பதிப்பு ,மீத்தேன்
5.சட்டம் ஒழுங்கு பிரச்சினை
ஆனால் படமாட்டாய்ங்க. ஏன்னா ராமேஸ்வரம் போனாலும் சனேஸ்வரம் விடாதாம்.
மாற்றம் ஒன்றே மாறாததுனு சொல்லி வச்சிருக்காய்ங்க. இல்லேங்கல. ஆனால் கீழ் காணும் பழமொழிகளை பாருங்க
1. நாயை குளிப்பாட்டி நடு ஊட்ல வச்சாலும்
2.எலுக்க தோலு தெச்சி ஏடாதி உத்திக்கினா
3.நாய் வாலை நிமிர்த்தமுடியுமா
4.முதல் கோணல் முற்றும் கோணல்
5.ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கனும்.
சரி தலைப்புக்கு வந்துரலாம் .பலருக்கும் ஒரு நம்பிக்கை என்னடான்னா ராமேஸ்வரம் போனா சனேஸ்வரம் விட்டுரும்.காள ஹஸ்தி போனா சர்ப்பதோசம் போயிரும்.
ஒரு ம..னாவும் போகாது.
ஒரு வேளை நீங்க பிச்சை எடுத்து ,அழுக்கும் கிழிசலுமான ஆடையோட ,கால் நடையா போனா சனியோட எஃபெக்ட் குறையலாம் (அதுவும் நிரந்தரமா இல்லை. டெம்ப்ரரியா)
இதே போல நீங்க லாலாபோடற பார்ட்டியா இருந்து லாலாவை முழுக்க நிப்பாட்டி அந்த காசுல மாசம் ஒரு தரம் காளஹஸ்தி வந்து போனா ஒரு வேளை ராகு -கேதுவோட எஃபெக்ட் குறையலாம்.
நீங்க என்னவோ அழுக்கு துணி போல -மேற்படி புண்ணியஸ்தலம்(?)லாம் வாஷிங் மெஷின் போல நினைச்சு ரெம்ப துடிக்காதிங்க.
ஒரு வேளை அங்க சுத்தப்படுத்தியே அனுப்பினாலும் -மறுபடி அழுக்கு சேர எவ்ள தேசாலம் ஆகும்?

S Murugesan
Lavanya says:

Very good sir ,had a hearty laugh reading the sayings ,also you clarified my doubt regarding visiting holy places for dosha removal .

S Murugesan says:

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி லாவண்யா அவர்களே

ஜீ.ஆர். வேல்முருகன் says:

அண்ணே அதென்ன லாலா?

S Murugesan says:

சரக்கு

A.S. Kumar says:

ராமேஸ்வரம் போனாலும் சனேஸ்வரம் விடாதாம்.நாட்டுல இருக்கிற மக்கள் எல்லோரும் போயி குளிக்கனுமா?. இல்ல தலைவர்கள் போயி குளிக்கனுமா?.
இல்ல நாங்க பிச்சை எடுத்து ,அழுக்கும் கிழிசலுமான ஆடையோட ,கால் நடையா போனா சனேஸ்வரம் விடுமா?.

இப்பவே 90 % மக்கள் அப்படிதானே இருக்கிறார்கள். தண்ணி , கரென்ட் ,விவசாயம் இல்லாம நாங்க அப்படிதானே இருக்கிறோம்.

S Murugesan says:

பாஸ் !
சனிக்கு தேவை கொஞ்சம் அழுக்கு-கொஞ்சம் வியர்வை -கொஞ்சம் பேட் ஸ்மெல். இதுக்கு தேவை உடல் உழைப்பு.

இவை மட்டும் இருந்தால் ராமேஸ்வரமும் தேவையில்லை.லோக்கல்ல சனேஸ்வரன் சன்னிதியும் தேவையில்லை .

P.T.Kannan says:

அய்யா
கட்டுரை எழுத்துக்கு நடுவுலே பொட்டி பொட்டியா மறைக்குதே……….!

S Murugesan says:

வாங்க கண்ணன் !
விட்ஜெட்டை சொல்றிங்களோ?

P.T.Kannan says:

ஆம் ஐயா

S Murugesan says:

கண்ணன் !
எது சௌகரியத்தை கொடுக்குதே அதை கூட மறந்துருவம்.ஆனால் எது “தொல்லை”கொடுக்குதோ அதை தான் மொதல்ல கவனிப்போம்.

அப்படியாச்சும் கூடுதலா நாலு பேரு லைக்/ஷேர் பண்ணட்டுமே

P.T.Kannan says:

ஐயா நம்ம புத்தகம் வாங்க மணியார்டர் அனுப்பிட்டேன். விபரம் swamy7867@gmail.com லில் அனுப்பியுள்ளேன்

S Murugesan says:

வாங்க கண்ணன் !
மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *