சனி பிடிக்கிறதுக்கு மிந்தி

4 இன் ஒன்சனிப்பெயர்ச்சின்னா ஒவ்வொரு பஞ்சாங்கத்துல ஒவ்வொரு தேதி போட்டிருப்பாய்ங்க. இதுல சனி பகவான் சனிப்பெயர்ச்சி வரைக்கெல்லாம் வெய்ட் பண்ணி வேலைய ஆரம்பிக்கமாட்டாரு.ஆறு மாசம் மிந்தியே வேலைய ஆரம்பிச்சுருவாரு. கீழ் காணும் சம்பவங்கள் சனி பிடிக்கிறதுக்கு 6 மாசம் மிந்தியே நடக்கிறதை நிறைய கேஸ்ல பார்த்திருக்கேன்.

1.தலையில அடிபடும்
2.எவனாச்சும் கருப்பு பெய்ண்ட்டையோ /கீலையோ பூசிருவான்
3.வேலைக்காரன் முரண்டு பிடிப்பான்
4.இரும்பு பொருள் காணாம போய் /கெட்டுப்போய் அவதிப்படுவம்
5.நாற்காலியிலருந்து நழுவி விழுவம் /நாற்காலி ஆட்டம் கொடுக்கும்
6.கை கடிகாரம் ரிப்பேராகலாம்.
7.செல் ஃபோன்,கம்ப்யூட்டர்  டைம்  அப்டேட்ல பிரச்சினை வரலாம்
8.வீட்டை காலி பண்ண வேண்டி வரலாம்
9.தாய்க்கு பிரச்சினை அ தாயால் பிரச்சினை
10.வாகனம் ஆப்படிக்கும்
11.பொஞ்சாதிக்கு கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினை
12.நண்பர்களுடன் விரோதம்
13.அகால போஜனம்,அகால நித்திரை ,மலச்சிக்கல்
14.முகம் பார்க்கிற கண்ணாடி -சாமி படம் விழுந்து உடையும்
15.தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவரால் பிரச்சினை
16.மேற்கு திசை பயணம் -போனா நிச்சயம் வேலை ஆகும்ங்கற நிலையில- தள்ளி தள்ளி போகும்.
17.கருப்பா பயங்கரமா -பயங்கர கருப்பா இருக்கிறவுகனால பிரச்சினை
18.லாஜிக்கே இல்லாம போலீசுக்கு பதில் சொல்ல வேண்டி வர்ரது.
19.வீட்ல சாக்கடை அடைச்சுக்கறது.
20.காக்கா தலையில கொத்திட்டு போறது
21.காக்கா வீட்டுக்குள்ள நுழைஞ்சு ஒரு ரவுண்டு அடிச்சுட்டு போறது.
22.முகத்துல எண்ணெய் வடிய ஆரம்பிக்கிறது, முடி உதிர்வது, வெள்ளை முடி அதிகமா வர்ரது.

23.எங்கயாச்சும் எக்கு தப்பா மாட்டின  எலி செத்துவச்சு வீட்டையே நாறடிக்கும்
(இதே போல சனி உங்களை விட்டு விலகுவதற்கு மிந்தியும் சில பல சம்பவங்கள் நடக்கும் அவற்றின் பட்டியல் நாளை)
இந்த மாதிரி ரீட்டெய்ல்ல மேட்டரை பீராயறதுக்குள்ள வயசாயிரும்.இதுவரை நம்ம சைட்ல வந்த வராத மேட்டரை எல்லாம் ஹோல் சேலா நாலு புஸ்தவமா போட்டிருக்கம் ஒரு செட் வாங்கிருங்களேன். விலை ரூ.250 மட்டும் (கூரியர் சார்ஜ் உட்பட) விவரங்களுக்கு இங்கே அழுத்துங்க.

5 Replies to “சனி பிடிக்கிறதுக்கு மிந்தி”

vinoth

19/04/2014 at 12:12 pm

// 23.எங்கயாச்சும் எக்கு தப்பா மாட்டின எலி செத்துவச்சு வீட்டையே நாறடிக்கும்
(இதே போல சனி உங்களை விட்டு விலகுவதற்கு மிந்தியும் சில பல சம்பவங்கள் நடக்கும் அவற்றின் பட்டியல் நாளை) //

விலகுவதற்கு முன் இருப்பவற்றையும் எழுதுங்க ஜி..

Reply

  S Murugesan

  19/04/2014 at 4:10 pm

  ஜீ !
  உங்களுக்கு ஒர்க் அவுட் ஆன பாய்ண்டா இது?

  Reply

Thirumurthy

15/04/2014 at 7:35 am

நல்முயற்சி வாழ்த்துக்கள்

Reply

ஜீ.ஆர். வேல்முருகன்

15/04/2014 at 3:13 am

தல, நான் 250ரூபா கட்டினா எனக்கு 4 புஸ்தகம் அனுப்பவீங்களா தல!

Reply

  S Murugesan

  15/04/2014 at 4:42 am

  வாங்க வேல் முருகன் !
  ஏன் இந்த டவுட்டு? ஆனால் ஒரு நிபந்தனை இந்தியாவுல உள்ள விலாசத்துக்கு மட்டும் -பதிவு பார்சல்ல அனுப்புவம்

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *