Tags    

Categories  Tamil Horoscope கிரகங்களுக்கு டேக்கா

நாத்திகம் பேசவும் ஒரு “வில்” வேணம்

Coffee 7

“குடலேற்றம் தெரியாமல் கோடி பணம் செலவழிச்சான்”னு  ஒரு சொலவடை உண்டு. குடலேத்தங்கறது சிம்பிள் மேட்டர். விவரமான ஒரு பாட்டி கை வசம் இருந்தா மேட்டர் ஓவரு. இல்லின்னா பொளப்பு நாறீரும்.

ஜோசியத்துலயும் இந்த மாதிரி சில்லறை மேட்டர் நிறைய இருக்கு. ஆரா இருந்தாலும் இந்த மாதிரி சில்லறை மேட்டருகளை தெரிஞ்சு வாழ்ந்தா பிரச்சினையே இருக்காது. அல்லது எது தங்களை ரெம்ப இழுக்குதோ அந்த பக்கம் போகாம இருந்துரனும்.

நாம இந்த ரேஞ்சுல பரிகாரம் சொல்றதால  ஜோசியத்தை நக்கலடிக்கிறவுகளையும் கன்வின்ஸ் பண்ண வேண்டியிருக்கு. ஜோசியத்தை தெய்வ வாக்கா நினைச்சு வாழறவுகளையும் கன்வின்ஸ் பண்ண வேண்டியதா இருக்கு.

நான் என்னைக்கும் நாத்திக வாதத்தை இழிவா  நினைச்சதுமில்லை பேசினதுமில்லை. நாத்திகர்களை பற்றி சில மனக்குறைகள் உண்டு.

அரைவேக்காட்டு ஆத்திகர்கள் எப்படி சாமிய பிடிச்சு தொங்கறாய்ங்களோ -அப்படியே அரை வேக்காட்டு நாத்திகர்களும் சாமிய பிடிச்சு தொங்கறாய்ங்க.
நான் என்ன சொல்றேன்னா ரெண்டு க்ரூப்புமே கடவுளை விட்டு நகர்ந்து வாங்க மன்சனை பாருங்க.”ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா”.பெரியார் கூட “கடவுளை மற மனிதனை நினை”ன்னு சொல்லியிருக்காரு.

ஒரு “வில்” இல்லாத ஆத்திகர்கள் கடவுளை திராட்டுல விட்டுர்ராப்ல, “வில்” இல்லாத நாத்திகர்கள் நாத்திகத்தை திராட்ல விட்டுர்ராய்ங்க.
“வில்”ங்கற வார்த்தைக்கு என்ன அருத்தம்? “மன உறுதி?”

1997 ல நாம ப்ரெட் ஹன்டர். ஒரு சைன் போர்ட் பெய்ன்டர் கேராஃப்ல இருக்கம். ஏதோ தனியார் பள்ளியில ட்ராயிங் வாத்யார் வேலைய நம்பி கண்ணாலம் வேற கட்டிக்கிட்ட பார்ட்டி ஒருத்தர் கிராஸ் ஆனாரு.

திருஷ்டி சுத்திப்போட்ட எலுமிச்சம்பழத்துல தான் ஜூஸ் குடிப்பேன். தி.சு.போ தேங்காய்ல தான் சட்னி அரைப்பேன்னு ஒரே அலப்பறை.
நாம முடிஞ்சவரை நம்ம கொள்கைய சொன்னோம். ஊஹூம் கேட்கற மாதிரியே இல்லை. இதுல பிரம்மங்காருவ வேற நக்கலடிக்க ஆரம்பிச்சுட்டாரு. பிரம்மங்காரு எதிர்காலத்துல என்ன நடக்கும்னு ச்சொம்மா குத்து மதிப்பா கெஸ் பண்ணி சொல்லி விட்டுட்டாராம்.

செம கடுப்பாகி “பிடி சாபம்”னு  அந்தாளோட ராசிய வச்சு ஒரு பாய்ண்டை அள்ளி விட்டம்.
“மவனே காவா ஓரம் பெய்ண்ட் டப்பா  பிடிக்கிற  நேரம் கிட்டக்க இருக்கு. அப்பமும் இந்த நாத்திகம் பேசு நான் மதிக்கிறேன்”
அந்த  நேரம் வந்தது.ஆனால் அவரோட நாத்திகம்? போயே போச்.

இன்னொரு நண்பர் இடது சாரி சிந்தனைகள்,மனித உரிமை ஆர்வலர். எல்லாம் சரி .கடவுள் மேட்டர்ல நாத்திகவாதி.
அவரோட பொஞ்சாதிக்கு உலகத்துலயே லட்சத்துல ஒருத்தருக்கு வர்ர ப்ளட் கேன்சர் ஏதோ வந்துருச்சு. இவரும் ஆன மட்டும் எல்லாத்தையும் வித்து வைத்தியம் பண்ணாரு. வேலைக்காகல. அடுத்த கண்ணாலத்துக்கு நாம தேன் மோட்டிவேஷன், கன்சல்ட்டன்ஸி எல்லாம்.
இப்பம் நல்லா இருக்காரு. ஆனால் ஆராச்சும் திருப்பதி லட்டு கொண்டுவந்தா கூட செருப்பை கழட்டிட்டு கும்பிட்டுக்கிறாரு.

பெரியாரை பாருங்க. அவரு நாத்திக வாதத்தை விட்டு தொலைக்க எத்தனையோ காரணங்கள் அவர் வாழ்க்கையில கிராஸ் ஆச்சு. ஒரு வீசிங் ப்ராப்ளம் ஒன்னு போதும். ஆனால் அவருக்கு ஒரு ஸ்ட்ராங் வில் இருந்தது. நான் எல்லாம் வீசிங் மாட்டிக்கிட்டா டெம்ப்ரரியா நாத்திகனாயிர்ரது.
நான் என்ன சொல்றேன்னா

ஆத்திகர்களே ஆத்திகர்களே ! ஜோதிடம் -ஜோதிட பலன்லாம் ஒன்னும் கல்வெட்டு கிடையாது. கொஞ்சமே கொஞ்சம் வில் இருந்தா சரியான ஜோசியர் கிடைச்சா -அவர் சொல்ற பரிகாரங்களை கீப் அப் பண்ணா லேசா டிங்கரிங் பார்த்து கலர் மாத்திரலாம்.

இதே போல நாத்திகர்களுக்கு ..

நாத்திகர்களே நாத்திகர்களே !
கொஞ்சம் பொறுப்பா ஆராய்ச்சி பண்ணுங்க. கு.ப சந்திராஷ்டமம். இது எப்படிப்பட்ட எஃபெக்டை கொடுக்குது. ராசி நாதன் 6-8-12 ல வந்தா எப்படி இருக்கு? அஷ்ட ம சனி என்ன செய்யுது? கேது புக்தி என்ன செய்யுது. செவ் பல்பு வாங்கினா எப்படி இருக்கு? ராகு கேது கோசாரத்துல ஆப்படிக்கிற பொசிஷனுக்கு வரும் போது என்ன ஆகுது?

கு.ப அப்சர்வ் பண்ணுங்களேன். அனுபவங்களை வச்சு ஜட்ஜ் பண்ணுங்களேன்.ஏன் அவசரப்பட்டு நக்கலடிக்கிறிங்க?

S Murugesan
Rajapriyan says:

Raasinathan 6l iruntha enna aagum, athuku enna seiyanum…

S Murugesan says:

ராஜ ப்ரியன் !
இங்கே லேஸா டவுட் வருது. கிரகம் நின்ற ராசி நாதனா?
உங்கள் ஜன்ம ராசி நாதனா?

Rajapriyan says:

Ayya
Ipa neenga romba fast..munnadi oru pathiva padika oru vaaram wait panni, aparam athuku comment epa pathil varumnu yaruku theriyum…..ana ipa oru continuity irukuthu..,.
Lagna nathan 6l thulam veetil irukar…aatchi ana maraikirar….ithu orae kulapama iruluthu….

S Murugesan says:

ஹ ஹா..அப்போ கேது புக்தி .இப்பம் சுக்கிர புக்தி நடக்குதுல்ல.மேலும் பதில் தந்துருவான்யான்னு நீங்க மனசுல நினைச்சா உடனே பதில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *