கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் : 4

Coffee 7அண்ணே வணக்கம்ணே!
கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கிறதுன்னா இது ஏதோ நாத்திக வாதம்னு நினைச்சுராதிங்க. நான் சொல்லப்போறது அக்மார்க் ஆன்மீகம். அதாவது  கடவுளின் படைப்பான கிரகங்களுக்கு அப்டியே சரண்டர் ஆயிர்ரது.

கிரகங்கள் கொடுக்கிற தீயபலன்லாம் ஃபைனான்ஸ் காரன் கிட்டே  வாங்கின கடன் மாதிரி. இதை ஒன் டைம் செட்டில் மென்டும் பண்ணலாம். தவணைய சரியா கட்டாம அப்பப்போ ஃபெனால்ட்டி போட்டும் கட்டலாம். அல்லது கட்டாமயே இருந்து  ஃபைனான்ஸ் காரன் வசூல் ராஜா யாரையாவது அப்பாய்ண்ட் பண்ண ,அவன் நம்மை  அட்மிட் பண்ணிக்கிட்டு நுங்கெடுத்த பிறவு  ஒன் டைம் செட்டில்மென்டும் பண்ணலாம். எல்லாம் நம்ம கையில இருக்கு.

இதுல நான் கத்துக்கொடுக்கப்போற சூட்சுமம் அன்னைன்னக்கு பீடைய அன்னன்னைக்கே ஒழிச்சுர்ர டெக்னிக் தான்.

இதுல நமக்கு ஆமை ஒரு குரு. அதனோட ஓடென்னவோ செம ஸ்ட் ராங்கு.ஆனால் கை கால் எல்லாம் கொள கொளன்னு இருக்கு. இதனால ஆமை என்ன பண்ணுது? ஆபத்துன்னு வந்தா படக்குன்னு எல்லாத்தையும் உள்ளாற இழுத்துக்குது.

டைனோசர் இனம் ஏன் ஒட்டு மொத்தமா அழிஞ்சு போச்சு? தின்னு பெருத்து -அசைய கூட முடியாத நிலை வந்துருச்சாம். அதனால கபர் ஸ்தானுக்கு பேக்கேஜ் டூர்.
ஆதியோடந்தமா வாரத்துக்கு ஒரு பதிவை போடறதை விட டச்சுல இருக்கலாமேன்னு இப்படி துண்டு துக்கடாவா போட்டுக்கிட்டிருக்கன்.

சாரி !

3 Replies to “கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் : 4”

Prabu

22/03/2014 at 2:22 pm

படிக்க ஆவலுடன் உள்ளோம்.

இப்படிக்கு,
பிரபு

Reply

GR VELMURUGAN

21/03/2014 at 8:47 pm

அண்ணே, அந்த ரகசியத்த சொல்லுங்கண்ணே… படாத பாடு படுறேன்…..

Reply

    S Murugesan

    21/03/2014 at 11:24 pm

    வாங்க வேல்முருகன் !
    சொல்லத்தானே போறேன். வெய்ட் ப்ளீஸ்

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.