Tags    

Categories  Tamil Horoscope அனுபவஜோதிடம்

கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் : 3

 Coffee 7

அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுல  சொன்னாப்ல ஆத்தாவ என்னதான் கன்வின்ஸ் பண்ணி இந்த மாதிரி விஷயங்களை எழுத ஆரம்பிச்சாலும்  நமக்கு “பல்பு” கியாரண்டி போல.
ஆனாலும் இதை எல்லாம் மீறித்தான் எழுதிக்கிட்டு வரன். ராமானுஜர் கோபுரமேறி “ஓம் நமோ நாராயணாய”னு கூவினாரே அவர் தான் நமக்கு இன்ஸ்பிரேஷன்.
விவேகானந்தர் கூட “தன்னவர்களுக்காக தன் சொந்த ஆன்மீக முன்னேற்றத்தை தள்ளிப்போட்டுக்கொள்வது தான் ஒப்பற்ற தியாகம்”னு  சொல்லியிருக்காரு.
இன்னைய தேதிக்கு நாம பதிவும் போட தேவையில்ல, மார்க்கெட்டிங்கும் பண்ண தேவையில்ல. வளர்பிறையில கொஞ்சம் நொண்டியடிச்சாலும் தேய்பிறைல ஒத்தைக்கு ரெட்டியா காசு பணம் புரண்டுருது.
ஆனாலும் நாம தொடர்ந்து எழுதறம்.ஏன்னா .. நமக்கும் மத்தவுகளுக்கும் வித்யாசம் இருக்கிறதை ஆத்தாவுக்கு இல்லின்னாலும் நமக்கு நாமே காட்டி நம்பவைக்க வேண்டியதா இருக்கு.
நாம இன்னைக்கு எழுதிக்கிட்டு வர்ர விஷயம்லாம் எந்த புஸ்தவத்துலருந்தும் பாரா பாராவா உருவினதில்லை. அதே நேரம் சரஸ்வதி வந்து தர்ப்பையில  நம்ம நாக்குல ஓம்காரம் எழுதி கத்துக்கொடுத்ததும் இல்லை தான்.
ஆனால் இந்த மேட்டர்லாம்  நமக்கு ஸ்பார்க் ஆக தர்க்கத்து ஒவ்வாத காரணங்கள் தான் கைவசமிருக்கு. நமக்கு ஸ்பார்க் ஆனதை பொதுவில் வச்சு நாலு பேர் ஃபாலோ பண்ணி அவிக நெல்லாருக்கனும் -கையோட கையா நாலு பேருக்கு நெல்லது செய்யனும்னு  துடிக்கிறோம்.
நிற்க கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கிறதுன்னா கிரகங்களை வேலை செய்ய விடாம பண்றது கடியாது.கிரகங்களுக்கு நம்ம உடல்,மனம்,புத்தி,குடும்ப வாழ்க்கை,சமூக வாழ்க்கை பெருசா பாதிக்காம “வேலை கொடுக்கிறதுதான்”.
இன்னைக்கு ஏறக்குறைய மன்ச பிறவி மாதிரியே பதவிசா இருக்கிற “ஸ்வீட்டி” (பாமரேனியன் நாய்) வீட்டுக்கு வந்த புதுசுல ரெம்ப ஆக்டிவ். ராத்திரியானா இருப்பு கொள்ளாம தவிக்கும். உர்ரு உர்ருன்னு ஒரே சவுண்டு. என்னமோ வல்சம்மா கூட ரன்னிங் ரேஸ்ல பார்ட்டிசிப்பேட் பண்ணிட்டு வந்தாப்ல ஒரே இரைப்பு. அப்பம் அன்றைய  நியூஸ் பேப்பரை தூக்கி அதுமின்னே போட்டுர்ரது. விடியறதுக்குள்ள நூல் நூலா கிழிச்சு தொங்க விட்டுருக்கும். நோ உர்ரு உர்ரு,நோ தவிப்பு, நோ இரைப்பு.
இதே ஃபார்முலாவத்தான் கிரகங்க மேட்டர்லயும் அப்ளை பண்றம்.
கிரகங்களை வேலை செய்ய விடனும். இதெல்லாம் வங்கிக்கு தவணை கட்டறாப்ல. கிரகங்களை வேலை செய்யாம தடுத்தா ஒரே தாட்டியா மண்டையில கல்லை தூக்கி போட்டுரும்.
கிரகங்களுக்கு எப்படி வேலை கொடுக்கிறதுன்னு நாளையிலருந்து பக்காவா பார்த்துரலாம்.உடுங்க ஜூட்டு.

S Murugesan
vinoth says:

ஜி ..
சாவை தள்ளி வைக்கவும் ,
ஸ்டிரெய்டா முக்திக்கும் வழி இருக்கிறாதா சொல்றீங்களே..
அத எழுதுங்க.

அப்புரம் விபரீத வினாடிகள் எழுதுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *