கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் வாங்க :2

Coffee 7அண்ணே வணக்கம்ணே !
செவ் தசை கேது புக்தி முடிஞ்சுருச்சு.ஆனாலும் ஆதியோடந்தமா ஒரு பதிவை போடலாம்னா முடியல. இந்த கிரகங்களுக்கு டேக்கா  சமாசாரத்தை கையில எடுத்திருக்கன். ஜோதிடமே தெய்வீகம் -தெய்வ ரகசியம்னுவாய்ங்க. அதை வெளிப்படுத்தினாலும் பரவால்ல. இந்த டேக்கா கொடுக்கிற மேட்டர் இன்னம் சீரியஸ் மேட்டராச்சே .இதை எல்லாம் இப்படி கொட்டிட்டா எப்படின்னு நினைப்பிங்க.

மேட்டர் என்னனா ..உங்களுக்கு “கொடுப்பினை” இருந்தா இந்த பதிவை படிக்காமயே நான் இதுல சொல்லியிருக்கிற மேட்டரை அசால்ட்டா அப்ளை பண்ணி டேக்கா கொடுத்திருப்பிங்க. அந்த கொடுப்பினை இல்லைன்னு வைங்க. நெவர்.. முடியவே முடியாது.

அட ஜோதிடத்தையே எடுத்துக்கங்க. ஒரு காலத்துல அவா கஸ்டடியில இருந்தது.அவா பொத்தி பொத்தி ஃபிலிம் காட்டிட்டிருந்தாய்ங்க.
இன்னைக்கு என்னைவிட என் க்ளையன்ட்ஸுக்கு நிறைய மேட்டர் தெரிஞ்சிருக்கு.ஆனாலும் என்ன புண்ணியம்? அவிக ஏன் நம்மை கான்டாக்ட் பண்ணனும்.
மேட்டர் என்னனா .. நம்ம விஷயம்னு வர்ரப்ப  நம்ம நாலெட்ஜ் ஊத்திக்குது. ஜோசிய மேட்டரே இப்படின்னா இந்த டேக்கா கொடுக்கிற மேட்டரு? ஊஹூம்.
இதுல இன்னொரு சிக்கலும் இருக்கு. இந்த டேக்கா கொடுக்கிற முயற்சியில இறங்கினதும் எல்லாமே ரெபல் ஆயிரும்.பீதிய கிளப்பும். நாமே எதுக்கு வம்புன்னு விட்டு தொலைச்சுருவம்.

அடுத்து வர இருப்பது பிரளயம். இது அவளோட அஜெண்டா. ஆனால் நாம கனவு காணுவதும் -உழைப்பதும் ஒரு நல்லரசுக்காக,ஒரு வல்லரசுக்காக ,ஒரு சம தர்ம சமுதாயத்துக்காக. இது ரெண்டும் எப்படி ஒத்துப்போகும்?
அதனால ஆத்தாவ “ஆத்தா ! உங்க அஜெண்டா பிரளயம் தானே. அதை தடுத்து நிறுத்தற அளவுக்கெல்லாம் நமக்கு “கட்ஸ்” கிடையாது. அதும்பாட்டுக்கு வரட்டும். அது வரதுக்கு மிந்தி ஒரு பெட்டர் லைஃப் . இந்த பலியாட்டுக்கு மஞ்சத்தண்ணி குளியல் மாதிரி என் திட்டம் அமலாயிபோவட்டுமே”ன்னு கன்வின்ஸ் பண்ணிக்கிட்டிருக்கன்.
தாளி இந்த..சாந்தி காலத்துலயே சனம் செம அல்லாடுது.அரசாங்கம் தள்ளாடுது. இதுல பிரளயம் அது இதுன்னு வந்துட்டா கோவிந்தா.
அதுக்குள்ளயாவது ஒரு நல்லரசு -ஒரு வல்லரசு -ஒரு பெட்டர் லைஃப். இதான் நம்ம அஜெண்டா. ஆனால் இந்த மோடி கும்பலும் -ராகுல் க்ரூப்பும் ரூம் போட்டு ரோசிச்சு வெத்துக்கு சிலும்பறாய்ங்க. இந்த மாற்று அணி மசுரு அணி எங்க இருக்குன்னே தெரியல. அன்னைக்கு மாதிரி ஒரு ஜே.பி ,ஒரு விபிசிங் இன்னைக்கு இல்லை.
சரி மேட்டருக்கு வந்துர்ரன். ஜோதிடம்,டேக்கா கொடுக்கிறது ..அட ஸ்ட்ரெய்ட்டா முக்தி கிடைக்கிற வழியே இருந்து சனத்துக்கு கொடுத்தாலும் “கொடுப்பினை”இருக்கிறவனுக்கு தான் அது போயி சேரும். அதனால நமக்கு அந்த கவலை எல்லாம் கிடையாது.
சரிங்க ..அந்த கொடுப்பினைங்கறது நமக்கு வரனும்னா என்ன பண்ணனும்னு கேப்பிக சொல்றேன். “ருணானு பந்த ரூப்பேனா பசு,பத்னி ,சுதா(ஆ)லயா”ங்கறது ஸ்லோகம். ருணம் =கடன் ,பந்தம் =கட்டு. ருணானுபந்தம்னா கடனால ஏற்பட்ட கட்டுகள் .இவற்றின் பலனாக கிடைக்கிறதுதான் மாடு,மனைவி,மக்கள்,வீடு வாசல் எல்லாம். இந்த ருணானுபந்தம்ங்கற கரடு முரடான வார்த்தைக்கு நேர் அர்த்தம் கொடுக்கிற வார்த்தை தான் கொடுப்பினை.
உங்களுக்கு இந்த உலகம்/இயற்கை கடன் பட்டிருந்தா எல்லாம் தானா வந்து சேரும். நீங்களா நாக்கை தொங்கபோட்டு அலைஞ்சு பறை சாத்தினா ..கிடைக்கலாம்.ஆனால் உங்களுக்கு சேர வேண்டியதுக்கு மேல கிடைச்சுட்டதால நீங்க கூடுதலா கிடைச்சதை இந்த இயற்கைக்கோ /உலகத்துக்கோ கொடுத்தே ஆகனும். அப்பத்தேன் அக்கவுண்ட் டேலி ஆகும்.
நெல்ல மேட்டர் எதுவானாலும் சரி அதுவா உங்களை தேடி வந்தா நீங்க பாசிட்டிவ் பேலன்ஸோட இருக்கிங்கனு அருத்தம்.  நீங்களா தேடி போனா தான் கிடைக்குதுன்னா அது நெகட்டிவ் பேலன்ஸ்ல இருந்து வருதுன்னு அருத்தம் .ஓவர் ட்ராஃப்டுங்கோ.
அதை திருப்பியே ஆகனும். இல்லின்னா புட்டுக்கும்.
உங்க கொடுப்பின அதிகரிச்சு – உங்க விஷயத்துல இந்த ஜாதகம்,டேக்கா கொடுக்கிற மேட்டர்லாம் ஒர்க் அவுட் ஆகனும்னா நீங்க செய்ய வேண்டியது..
1.பசு:
இன்னைக்கு ஆரும் பசு வளர்க்கிறதில்லை. ஆனால் ஆவின் டைரி கார்ட் வச்சிருக்கம். இதை பாதியா குறைங்க. ஒரு நாளைக்கு 4 காப்பின்னா அதை ஒன்றாக குறைச்சு ,மத்த நேரம் ப்ளாக் காஃபி குடிங்க. (மெடிக்கலாவும் நல்லது)
பால் திரவ ரூபம்ங்கறதால இது சந்திர காரகம் . சந்திரன் ஜல காரகன். தண்ணீர் உபயோகத்தை குறைங்க. (குடிக்கிற தண்ணிய குறைக்காதிங்க பாஸ்)
கொம்புள்ள பிராணி கொடுக்கிறதால இது செவ் காரகம். மின் உபயோகத்தை குறைங்க.
பசு கன்னு போடும். அதை காளைக்கன்னா இருந்தா வண்டியில பூட்டலாம். இந்த காலத்துல கார்,டூ வீலர்.
வாகனம் சுக்கிர காரகம். மாசத்துல15 நாள் பப்ளிக் ட்ரான்ஸ் போர்ட்டை யூஸ் பண்ணுங்க. இது சுக்கிர காரகம். உப்பு ,சர்க்கரை உபயோகத்தை பாதியா குறைங்க. லக்சரியை,பிக்னிக்,டூர் ,கெட் டு கெதர் ப்ரோக்ராம்ஸ் குறைங்க. நாவல்ட்டீஸ்,ஃபேன்சி பொருட்கள் உபயோகத்தை குறைங்க.
கொடுப்பினை அதிகரிக்கும்
பத்னீ:
பத்னின்னா மனைவினு அருத்தம் . மனைவியோட உபயோகத்தை குறைங்க. ஐ மீன் கில்மா மேட்டர் மட்டுமில்லை.அவிக மூலமா கிடைக்கிற  எல்லா விதமான சேவைகளையும் பாதியா குறைங்க. உ.ம் மாசத்துல பாதி நாள் நீங்க சமைக்கலாம். கில்மா மேட்டரும் அவிகவிக ஹெல்த், உணர்ச்சியை பொருத்து வாரம் ஒரு  முறை,மாதம் இருமுறைன்னு ப்ளான் பண்ணலாம்.
சுதா:
சுதான்னா குழந்தைகள். உங்க குழந்தைகளை உங்க சொந்த குழந்தைகளாவே நினைக்காதிங்க.ஆரோ ஃபேமிலி ஃப்ரண்டு -அவிக படிப்புக்காக உங்க வீட்ல விட்டு போயிருக்காருன்னு நினைங்க. அவிக மேட்டர்ல ஓவர் அட்டாச் மென்டும் வேணா, கமிட்மென்டும் வேணா.
ஆலயா:
இருக்கிறது சொந்த வீடா? ஓடனே ஒரு பத்து ரூவா ஸ்டாம்ப் பேப்பரை வாங்கி உங்க இஷ்டதெய்வத்துக்கு தானமா கொடுத்துட்டதா எழுதி அந்த தெய்வத்தோட படத்துக்கு கீழ வச்சிருங்க.  “இறைவா ..உன் வீட்டை எனக்கு வாடகைக்கு தாங்கனு கேளுங்க” இன்னொரு ஸ்டாம்ப் பேப்பர் எடுத்து வாடகை ஒப்பந்தம் எழுதுங்க. நீங்க கமிட் ஆன வாடகை தொகையை அந்த தெய்வத்தோட கோவில் உண்டியில மாசாமாசம் போடுங்க.
இங்கே நீங்க என்ன செய்யறிங்கங்கறது முக்கியமில்லை. எந்த விதமான உணர்வுகளோட செய்றிங்கங்கறதுதான் முக்கியம்.
இருக்கிறது வாடகை வீடா? பிரச்சினையே இல்லை. சொந்த வீட்டுக்கு ப்ளான் பண்றதை நிப்பாட்டுங்க. அதுக்குன்னு மாசா மாசம் ஒரு தொகைய வங்கியில கட்ட மறக்காதிங்க.ஒரு வீடு வாங்கற அளவுக்கு காசு சேர்ந்ததும் -யாரோ நண்பருக்கு -உங்க காசுல  ப்ரசன்ட் பண்றாப்ல இருந்தா எப்படிப்பட்ட வீட்டை வாங்கி ப்ரசன்ட் பண்ணுவிங்களோ அப்படி ஒரு கட்டின வீட்டை வாங்கிருங்க .
இப்பம் சொந்த வீட்டுக்காரவுகளுக்கு கொடுத்த யோசனைய அப்ளை பண்ணுங்க. சொந்த வீடோ வாடகை வீடோ அதை அழகுப்படுத்தாதிங்க. “என் வீடு “ங்கற ஃபீலே வேண்டாம்.
இன்னொரு முக்கியமான மேட்டர் என்னா “அடுத்தவுக கவனத்தை கவர என்னெல்லாம் செய்துட்டு வந்திகளோ அதை எல்லாம் விட்டு தொலைங்க. எதுலயும் உங்களை முன்னிலைப்படுத்தாதிங்க.
இதெல்லாம் செய்திங்கனா “கொடுப்பினை”அதிகரிக்கும். கிரகங்களுக்கு ரெம்ப ஈசியா டேக்கா கொடுக்கலாம்.

4 Replies to “கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் வாங்க :2”

aravind

20/03/2014 at 7:11 am

super all r true we want more like this

Reply

Sampath

18/03/2014 at 12:25 pm

fine, I agree

Reply

vinoth

17/03/2014 at 2:48 pm

ஜி ..
சாவை தள்ளி வைக்கவும் ,
ஸ்டிரெய்டா முக்திக்கும் வழி இருக்கிறாதா சொல்றீங்களே..
அத எழுதுங்க.

அப்புரம் விபரீத வினாடிகள் எழுதுங்க

Reply

Kruba

17/03/2014 at 11:47 am

Good Article Sir

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *