கிரகங்களுக்கு டேக்கா கொடுப்பது எப்படி?

Coffee 7
அண்ணே வணக்கம்ணே !
எங்க மாப்பிள்ளை டவுன்லருந்து ஒரு 3 கி.மீ தூரத்துல உள்ள கிராமத்துக்காரர். ஒன்னு நாலு நாள் வீட்டுக்கே போகாம ஸ்டுடியோவுலயே பழியா கிடப்பார். இல்லினா வீட்லருந்து புறப்பட  பகல் மணி பனிரண்டாயிரும்.

காலையில 9 மணியிலருந்து மதியம் 12 வரை யார் ஃபோன் பண்ணாலும் இதோ வந்துக்கிட்டே இருக்கன். கட்டமஞ்சி தாண்டிட்டம்பாரு. (இது டவுனுக்கும் அவிக கிராமத்துக்கும் இடையில வர்ர ஏரியா)

இதைத்தான் டேக்கா கொடுக்கறதும்பாய்ங்க.

மன்சன் மன்சனுக்கு டேக்கா கொடுக்கலாம்.கிரகத்துக்கு கொடுக்க முடியுமான்னா நிச்சயமா கொடுக்கலாம்.

அது எப்படிங்கறத இப்ப பார்க்கலாம். ஒரு பெண்ணுக்கு விதவையாகிற நேரம் வந்துருச்சு. அது நடக்காம கிரகங்களுக்கு எப்படி டேக்கா கொடுக்கறதுன்னா?
1.மொட்டை போட்டுக்கலாம் 2.கு.பட்சம் பாப் வெட்டிக்கலாம் 3.நெத்தி பொட்டை சின்னதா வச்சுக்கலாம்.4.மாடர்ன் மங்கையர் மாதிரி ராத்திரியில தாலிய கழட்டி வச்சுரலாம் 5.ப்ளெய்ன் சாரீஸ் அணியலாம் 6.நகை நட்டெல்லாம் கழட்டி வச்சுட்டு பிளாஸ்டிக்  மணி மாலை அணியலாம்.
இதே ஃபார்முலாவ பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.

உதாரணமா பிள்ளைக்கு கண்டம். உசுருக்கே ஆபத்துன்னு அடிச்சு சொல்ட்டாய்ங்க. ஒரு சேஃப்டிக்கு ராம நாமம் ஜெபிக்கலாம்.ஆஞ்சனேயரை சின்சியரா வழி படலாம். கூடவே பிள்ளைக்கு தனியறை கொடுத்து அவனுக்கு மட்டும் ஓட்டல்லருந்து சாப்பாடு வரவழைக்கலாம்.

அப்பா,அம்மா அழகு-அலங்காரம் -பந்தா எல்லாம் விட்டுட்டு ரெம்ப சிம்பிள் லிவிங்குக்கு மாறலாம். ஏதாச்சும் உபரியா பதவி பட்டம் இருந்தா துறக்கலாம்.
இப்படி அனேக க்ளைமேக்ஸ் எல்லாம் லைஃப்ல வரும்.அதையெல்லாம் எப்படி ஓவர் கம் பண்றது கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கிறதுன்னு ஒரு தொடர்பதிவு போடலாம்னு உத்தேசம்.உங்க கருத்தை கமெண்ட்ல சொல்லாம விட்டுராதிங்க.

6 Replies to “கிரகங்களுக்கு டேக்கா கொடுப்பது எப்படி?”

Balaji.G

13/11/2016 at 9:42 pm

விருச்சிக லக்னம். மீனராசி.
சனி 3ல் ( மகரத்தில் ஆட்சி பெற்றுள்ளது. இது நல்லதா கெட்டதா
பரிகாரம் என்ன?

Reply

  S Murugesan

  13/11/2016 at 10:01 pm

  பாலாஜி !
  படிப்பை பொருத்தவரை டெக்னிக்கல் லைனுக்கு மாறியிருந்தா பிரச்சினை இல்லை. அதே நேரம் தாய் /வீடு/வாகனம் வகையறாவில் பிரச்சினைகள்/அல்லல் அலைச்சல் ஏற்படும்.

  Reply

p.t.kannan

18/03/2014 at 5:25 pm

சனமும் இன்டராக்ட் ஆகி இந்திந்த க்ளைமேக்ஸு -இதுக்கு தீர்வு சொல்லுங்கனு கேட்டா இன்னம் நெல்லாருக்கும்

Reply

Thirumurugan Karthikeyan

15/03/2014 at 11:33 am

Sollunga sir eppdinu

Reply

  S Murugesan

  15/03/2014 at 3:14 pm

  வாங்க திருமுருகன் சார் !
  சொல்லத்தான் போறேன்.ஆனால் சனமும் இன்டராக்ட் ஆகி இந்திந்த க்ளைமேக்ஸு -இதுக்கு தீர்வு சொல்லுங்கனு கேட்டா இன்னம் நெல்லாருக்கும்.

  Reply

Kruba

15/03/2014 at 9:06 am

எதிர்பார்க்கிறேன் சார்.

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.