ஜாதகமே இல்லாது கிரகபலம் அறிய

Coffee 7அண்ணே வணக்கம்ணே !
நம்ம ராசி எதுவோ அந்த ராசி குணங்கள் வெளிப்படையா தெரியும். அதே சமயம் மற்ற 11 ராசிகளின் குணங்களும் ஹிடன் ஃபைலா இருக்கும்.
நம்ம ராசி நாதன் பல்பு வாங்கறப்ப மத்த ராசிகள்ள எந்த ராசியோட அதிபதி அந்த சமயம் ஷகரா இருக்காரோ அவரோட -அந்த ராசியோட குணங்கள் வெளிய வரும்.
இது மட்டுமில்லிங்ணா

.. நம்ம ஜாதகத்துல ஒரு கிரகம் ஒரு ராசியில இருக்குன்னு வைங்க. அது அந்த ராசியில நின்ன பலனை மட்டும் வாழ் நாள் எல்லாம் கொடுக்கறதில்லை. கோசாரத்துல அது ராசி மாறும் போது தான் மாறும் ராசிகளுக்கேற்ப பலன் கொடுக்குது.
உதாரணமா நம்ம ஜாதகத்துல கடகத்துல குரு உச்சம். இப்பம் கோசாரத்துல மிதுனத்துல  இருக்காரு. ஜாதகத்துல உச்சங்கறதால உச்ச பலனை கொடுக்கப்போறதுல்ல. மிதுனத்துல பகைங்கறதால அதுக்குண்டான பலனை தான் தருவாரு.
மிதுனத்துக்கு அதிபதி புதன். புதன்னா ஜோதிடம்,நூல் வெளியீடு இத்யாதில்லாம் வரும். மிதுன குரு நம்மை ரேக்கி விட்டு ஒரே சமயத்துல 4 புக்ஸ் பப்ளிஷ் பண்ண வச்சாரா இல்லையா?
அப்பாறம் ஜாதகத்துல உச்சமாகி என்ன புண்ணியம்னு கேப்பிக சொல்றேன். ஜாதக பலம்ங்கறது பேங்க் பாலன்ஸ் மாதிரி . கோசாரங்கறது ஏடிஎம் சென்டர் மாதிரி. ஏடிஎம் சென்டர் மூடியிருக்கிற மாத்திரத்துல பாலன்ஸ் இல்லாம போயிருமா? நோ ..
லொங்கு லொங்குன்னு வேற ஒரு ஏடிஎம் -ஐ தேடி ஓடனும் அல்லது  பாங்குக்கு போயி  ஃபார்ம் எழுதி வரிசையில நிக்கனும்.
ஆனால் பேங்க் பாலன்ஸே இல்லாதவனோட நிலைக்கும் ,பாலன்ஸ் இருந்து ஏடிஎம் சென்டர் மூடியிருக்கிறவன் நிலைக்கும் வித்யாசம் இருக்குல்ல?
ஜாதகத்துல குருபலம் இல்லாதவன் -கோசாரத்துலயும் குரு பலம் அவுட் ஆயிருச்சுன்னா ரெம்ப டீலாயிருவான்.ஆனால் ஜாதகத்துல குரு பலம் உள்ளவனோட சப் கான்ஷியஸ் மைண்ட்ல ஒரு வித பாதுகாப்பு உணர்வு இருக்கும்.அவன் அப்படியா சரி பார்த்துக்கலாம்னு இருந்துருவான்.
ஒரு கிரகம் பலம் பெற்றால்  அது காரகம் வகிக்க கூடிய மேட்டர்லாம் புஷ்கலமா இருக்கும் , நிறைய இருக்கும்னு ஒரு பிரமை  நமக்கு வருது.
ஆனால் நடப்பு அப்படியில்லை.
உதாரணமா என் ஜாதகத்துல  லக்னம் கடகமாகி குரு உச்சம். என் கிட்டே கு.பட்சம் 30 சவரன் நகையாச்சும் இருக்கனும்.ஆனால் இல்லை. ஏன்? தங்கத்து மேல நமக்கு பிரமைகள் கிடையாது. அது என்னமோ அந்த கால தூர்தர்ஷன் மாதிரி தான் ஒரு ஃபீல்.
இதனால நமக்கு எப்பம் தேவையோ அப்பம் கரீட்டா கிடைச்சுருது. அதுவும் அசால்ட்டா கிடைச்சுருது.
இதே என் நண்பர் ஒருத்தர் இருக்காரு. குரு அஷ்டமத்துல இருக்காரு. ஊருல உள்ள எல்லா நகை கடையிலயும்  நகை சீட்டு போட்டு வச்சிருக்காரு.
ஆக எந்த கிரகம் நம்ம ஜாதகத்துல பவர் ஃபுல்லா இருக்கோ அதனோடகாரகம்  நம்மை கவராது. ஆனால் தேவைங்கறப்ப படக்குன்னு வந்து சேர்ந்துரும்.
எந்த கிரகம் நம்ம   ஜாதகத்துல கெட்டு கிடக்கோ அதனோட காரகம் நம்மை கவரும். இஷ்டாத்துக்கு அதை சேகரிப்பம். தேவையான சந்தர்ப்பத்துல கை கொடுத்துரும்.
நம்ம ஜாதகத்துல சுக்கிரன் பல்பு.  நாலாங்கிளாஸ்ல இருந்து பலான புஸ்தவம் படிச்சு ஜஸ்ட் 1984 முதல் 1986 க்குள்ளயே பலான மேட்டர்ல செஞ்சுரி போட்டுட்டம்.  பலான பார்ட்டிக்கெல்லாம் பிரியாணி வரவழைச்சம். இதுவே கண்ணாலமாச்சு. குஷ்காவுக்கு கூடவழியில்ல.
இதையே எல்லா கிரகத்துக்கும் பொருத்தி பார்க்கலாம். ஜாதகமே இல்லாம எந்த கிரகம் உங்க ஜாதகத்துல  வலிமையா இருக்குன்னு தெரிஞ்சுக்கனும்னா சின்ன டிப்.
எந்த கிரகத்தின் காரகம் உங்களை ரெம்ப அட் ராக்ட் பண்ணுதோ அந்த கிரகம் உங்க ஜாதகத்துல பல்பு வாங்கியிருக்குனு அருத்தம்.
எந்த கிரகத்தின் காரகம் உங்களை கவரலையோ -கடுப்படிக்குதோ அந்த கிரகம் உங்க ஜாதகத்துல நெல்லா உட்கார்ந்திருக்குனு அருத்தம்.
ஓகேவா உடுங்க ஜூட்.

2 Replies to “ஜாதகமே இல்லாது கிரகபலம் அறிய”

p.t.kannan

18/03/2014 at 4:27 pm

சான்சே இல்ல
இது சூப்பர் மேட்டர்!!!!

Reply

sudharsan

14/03/2014 at 12:44 pm

//ஜாதகமே இல்லாம எந்த கிரகம் உங்க ஜாதகத்துல வலிமையா இருக்குன்னு தெரிஞ்சுக்கனும்னா சின்ன டிப்.
எந்த கிரகத்தின் காரகம் உங்களை ரெம்ப அட் ராக்ட் பண்ணுதோ அந்த கிரகம் உங்க ஜாதகத்துல பல்பு வாங்கியிருக்குனு அருத்தம்.
எந்த கிரகத்தின் காரகம் உங்களை கவரலையோ -கடுப்படிக்குதோ அந்த கிரகம் உங்க ஜாதகத்துல நெல்லா உட்கார்ந்திருக்குனு அருத்தம்.//

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.