அதிர்ச்சிகர அறிவிப்பு

Coffee 7அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்குத்தேன் நமக்கு செவ் தசையில சுக்கிர புக்தி ஆரம்பம்.ஆனால் பாருங்க நேத்திக்கு கூட கேது புக்தி செம வேல கொடுத்துருச்சு.
இன்று புதிதாய் பிறந்தோம் கணக்கா லேப் டாப்பை ஃபார்மட் அடிச்சுரலாம்னு நினைச்சு அடிச்சன். என்னடா பிரச்சினைன்னா ப்ளூ டூத் கனெக்ட் ஆகல்ல. டிவிடி ட்ரைவ் வேலை செய்யல. ப்ரைட் நெஸ் குறைக்க முடியல.

ப்ரைட் நெஸ் குறைக்க டிம்மர்னு ஒரு சாஃப்ட் வேர் போட்டு ஒப்பேத்தினேன். ட்ரைவ்ஸ் சிடிய நண்பனோட சிஸ்டத்துல போட்டு மெமரி கார்டுக்கு மாத்தி போட்டுக்கிட்டன். ப்ரைட் நெஸ் குறைக்க முடிஞ்சது.

ஒரு மாதிரியா எல்லாம் செட் ரைட் ஆகி ஜாதக பலன் பதிவுபண்ணினன். ஏற்கெனவே ஃபோன்ல இருந்து மெமரி கார்டை கழட்டி மாட்டினதால பலன்லாம் ஃபோன் மெமரிக்கு போயிருச்சு. அதை கார்ட் மெமரிக்கு ஷிஃப்ட் பண்ணினேன். மீண்டும் பலன் பதிவு பண்ண ஆரம்பிச்சன். மெமரி கார்டை பிடுங்கி கார்ட் ரீடர்ல போட்டு சிஸ்டத்துக்கு கொண்டு வந்தன்.

ஏதோ குழப்பத்துல ஃபோன் மெமரியிலருந்து மூவ் பண்ண ரெண்டு ஃபைலை டெலிட் பண்ணிட்டன். ஃபோன்ல இருக்கும்னு பார்த்தா அங்கயும் பெப்பே. எப்படியோ ஒரு சாஃப்ட் வேர் ஸ்டாக்ல இருந்ததால ரெண்டு ஃபைலையும் மீட்டேன்.

ஆஹா ..கேது புக்தி எஃபெக்ட் முடிஞ்சு போச்சு போலன்னு நினைச்சேன். அப்பத்தான் ஞா வந்தது 30 நாள்ள வின்டோஸ் 7 ஐ ஆக்டிவேட் பண்ணியாகனுமே.
ஒடனே மவளை அனுப்பி அதுக்குன்னு ஒரு சாஃப்ட் வேரை வாங்கி வரச்சொன்னேன். போட்டேன். அவ்ளதான். நிமிஷ நிமிசத்துக்கு ரீ ஸ்டார்ட் ஆக ஆரம்பிச்சுருச்சு. பிசின்னா பரவால்ல பவரை பிடுங்கிரலாம். லேப் டாப்ல பேட்டரி இருக்குல்ல.

அதை கழட்டி வீசறதுக்குள்ள நனைஞ்சு போச்சு (வியர்வைய சொன்னேன் பாஸ்)
ஒடனே நம்ம ஆஸ்தான ஹார்ட்வேர் ஜேம்ஸுக்கு கொடுத்தனுப்பியாச்சு. மதியம் தான் சிஸ்டம் கைக்கு வந்தது. அதுக்குள்ற கொண்ட கொள்கைய அமல்படுத்தும் போது என்னென்னவோ இழவெடுக்கும்.அதுக்கெல்லாம் பயந்தா ஆகாது. அடுத்த ஸ்டெப் .. இந்த சைட்ல உள்ள பதிவுகளை வேற ஒரு ப்ளாகுக்கு ஷிஃப்ட் பண்ணி இதையும் புதுசாக்கனும்.

ஒடனே வேறொரு நண்பர் கிட்டே போனேன். (அன்னார் டிடிபி +ஸ்க்ரீன் ப்ரிண்டர்) அவரோட சிஸ்டத்துலயே மொத்த பதிவையும் டவுன் லோட் பண்ணி புதிய ப்ளாகுக்கு அப்லோட் பண்ணிட்டன்.

அதுல ஒரு சிக்கல் என்னன்னா அனுபவஜோதிடம்.வோர்ட்ப்ரஸ் டாட் காம் பெயருள்ள ப்ளாகுக்கு பதிலா எஸ்முருகேஷன்.வோர்ட் ப்ரஸ்டாட் காம் ங்கற ப்ளாகுக்கு அப்லோட் பண்ணிட்டன். தவறை திருத்த என்னென்னவோ செய்துபார்த்தன் .ஊஹூம்.

எஸ்.முருகேஷன் ங்கற பேருக்கு நேம் நெம்பர் கேல்க்குலேட் பண்றேன்.ஒவ்வொரு தாட்டி ஒவ்வொரு நெம்பர்.ஒவ்வொருத்தரு கூட்டினா ஒவ்வொரு நெம்பர் வருது.
ஆக மொத்தத்துல இந்த பதிவை நீங்க படிக்கிற நிமிட்ல இருந்து பழைய பதிவுகளை இந்த சைட்ல படிக்க முடியாது.
பழைய பதிவுகளை படிக்க இங்கே வந்துருங்க.

2 Replies to “அதிர்ச்சிகர அறிவிப்பு”

p.t.kannan

18/03/2014 at 5:29 pm

என்னா சார் இது!
கிரகம் உங்களையே இந்த வாங்கு வாங்குது

Reply

  S Murugesan

  18/03/2014 at 5:38 pm

  வாங்க கண்ணன் !
  டாக்டருக்கு நோய் வரக்கூடாதா என்ன? மேலும் ஒரு காலத்துல காய்ந்த திராட்சை மாதிரி ட்ரிம்மா இருந்தன்.

  இப்பம்? பட்டுத்தானே ஆகோனம்/

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *