கார்டனில் இருந்து மிரட்டல் ஃபோன்

அண்ணே வணக்கம்ணே !
நாம ஏற்கெனவே தெலுங்கு தேசம் பார்ட்டி ஹெட் ஆஃபீஸ்லருந்து மிரட்டலை எதிர்கொண்ட பார்ட்டி தான் ஆனாலும் கார்டன்லருந்து மிரட்டல்னதும் பாடி பார்ட் எல்லாம் தனித்தனியா ஆட ஆரம்பிச்சுருச்சு.ஆவேசமா? பயமா ? ரெண்டும் கலந்ததா புரியல. இப்பமும் ஞா வல்ல.

நம்ம ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ தமிழக சபா நாயகருக்கு அனுப்பும் போதே கொஞ்சம் ஞம ஞமன்னு தான் இருந்துச்சு. ஆனாலும் சபா நாயகருக்கு தானே அனுப்பறோம்னு அனுப்பிட்டன். நாம எதிர்ப்பார்த்த மாதிரியே அந்த பக்கம் இருந்து நோ ரெஸ்பான்ஸ்.

சரி பார்த்துருவம்னு தேத்திக்கிட்டு கார்டனுக்கே அனுப்பிட்டன். அங்கருந்தும் நோ ரெஸ்பான்ஸ். அப்பாறம் வீணை காயத்ரி அம்மாவுக்கு மடல் . முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினது ,அவிக பார்ட்டி ஆஃபீஸுக்கு ஃபார்வார்ட் பண்ணது, நாம பார்ட்டி ஆஃபீஸுக்கு மடல் அனுப்பினதுல்லாம் தெரியும் தானே. இதோட நிறுத்தியிருந்தாலும் பரவால்ல. பெரிய இவரு மாதிரி மம்மிக்கு ஓப்பன் லெட்டர் வேற போட்டம்.

அதனோட விளைவு மிரட்டல்.
“யாரு ? சித்தூர் முருகேசனா?”
“ஆமாங்க.சொல்லுங்க”
“என்னய்யா அரசியல் பண்றிங்களோ?”
“அண்ணா நீங்க ஆருங்ணா?”
“கார்டன்லருந்து பேசறம்”
“அய்யா.. அப்படி அம்மாவுக்கு நெல்லது நடக்கனும் -நாட்டுக்கு நெல்லது நடக்கனும் தேன் அனுப்பினன்”
“அனுப்பிட்டு சும்மா இருக்கனும். எதுக்கு இந்த அலப்பறை?”
“எதுனா பேப்பர்ல வந்துருச்சுங்ளாய்யா?”
“அட..பேப்பர்க்கெல்லாம் வேற அனுப்பிட்டியளோ?”
“வேற வழி”
“இதோட நிறுத்திக்கனும்.. ஆமாம்”
“இல்லின்னா நீங்க நிறுத்திருவிங்ளாணா”
“என்ன .. பெரிய ம..நா மாதிரி பேசறே”
“……………………………….”
* * *
பொஞ்சாதி தட்டி எழுப்பினா. “என்னங்க.. கெட்ட கனவு கண்டிங்களா? யாரைங்க அப்படி திட்டிட்டிருந்திங்க.
* * *
அடச்சீ கனவா?

* * *
நாம சாதாரணமா இந்த மாதிரி டக்கால்ட்டி பதிவெல்லாம் போடறதில்லிங்ணா.ஆனால் என்ன செய்ய நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது நடக்கனும்னா இப்படி சில “கிட்ண பரமாத்மா”வேலைகளும் செய்ய வேண்டியிருக்கு.

இதுவே நான் சாதாரணமா ஒரு பதிவை போட்டு ஜோதிடம் 360 மொத 10 பிரதி கைக்கு வந்துருச்சு. மத்த 3 புஸ்தவமும் நாளைக்கு நாளன்னைக்கும் வந்துரும்.பிப்ரவரி 7 ஆம் தேதி முன்பதிவு பண்ணவுகளுக்கு கூரியர்ல அனுப்பிரப்போறேன்னு சொன்னா இது எத்தனை பேருக்கு போய் சேரும்?

இதுமட்டுமில்லிங்ணா.. ஏற்கெனவெ முன் பதிவு செய்தவுகளுக்கும் – பிப்ரவரி 7 க்குள்ள செய்ய போறவுகளுக்கும் 4+4 ஆக ரெண்டு செட் அனுப்ப முடிவு செய்திருக்கன். ஆரெல்லாம் முன் பதிவு செய்ய நினைச்சு செய்ய முடியாம போச்சோ அவிகல்லாம் முன்பதிவு செய்துருங்க.
சென்னை அன்பர்கள் நண்பர் சுந்தரத்தை தொடர்பு கொண்டு நேரிலும் பணம் செலுத்தலாம். புக்ஸ் எங்க செலவுல கூரிய்ர்ல வீட்டுக்கே வந்துரும். டோன்ட் ஒர்ரி.

(அவரது செல் பேசி: 9789987276)

எச்சரிக்கை:
பிப்ரவரி 7 க்கு பிறகு வாங்க நினைச்சா ஒரே செட்டுதான்.அதுவும் கூரியர் சார்ஜ் நீங்க பே பண்ணனும்.

பி.கு:
மவ கல்யாணத்துக்கு இன்னம் நாளிருக்கு (பிப்17) ஆனால் அதுக்கு மின்னே ஒரு க்ளைமேக்ஸ். அஞ்சாம் தேதி சென்னை போயி ப்ரஸ்ஸுக்கு செட்டில்மென்ட் பண்ணனும். (இது சொந்த பிரச்சினை ஆனால் இதுலயும் நாட்டு மக்களோட நல்வாழ்வு அடங்கியிருக்கு-பணம் பணம் பணம் புக்ல சனம் பணம் பார்க்கவும் -நாடு உருப்படவும் பல விஷயங்கள் கொடுத்திருக்கம்)

அடுத்து நதிகள் இணைப்புக்காக பாதயாத்திரை போற சர்தார் அண் கோவுக்கு ஒரு அஞ்சாயிரம் துண்டு பிரசுரம் ஸ்பான்சர் பண்றதா சொல்லியிருக்கன். அதுக்கும் பைசா தேவை.

ஒரு வேளை இந்த பதிவை படிச்சு கச்சா முச்சான்னு முன்பதிவு செய்துட்டிங்கனு வைங்களேன்.. புக் ரிலீஸ் பண்ணிட்டு -கண்ணாலத்தை நெல்லபடியா முடிச்சுட்டு – நதிகள் இணைப்புக்காக பாதயாத்திரை போற சர்தார் அண்ட் கோவுடன் ஜாய்ன் பண்ணிக்கலாம்.ஏதோ நம்மால முடிஞ்ச செலவை செய்யலாம்.

அதனாலதேன் இந்த “ஜில்பா”வேலைக்கு துணிஞ்சிட்டன். இனி இந்த மாதிரி டுபாக்கூர் பதிவெல்லாம் போடவே மாட்டேன். சாரி.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *