தாம்பத்யத்தை தகர்க்கும் படுக்கையறை அமைப்பு
அண்ணே வணக்கம்ணே !தாம்பத்யம்னா அது படுக்கையறையில மட்டும் தானான்னு கேட்கிறவுக ஆசீர்வதிக்கபட்டவுக. ஆனாலும் என்னைக்கோ ஒருக்கா – பெட் ரூம்லயும் வச்சுக்கத்தானே போறிங்க.அதனால நீங்களும் இந்த பதிவை படிக்கலாம்.உடலுறவுங்கற வார்த்தைய அதனோட சரித்திர மதிப்பு கருதி அப்படியே வச்சுக்கலாம்.ஆனால் இது வெறுமனே உடல் தொடர்பான சமாசாரம் மட்டுமில்லைன்னு டயரியில எழுதி ரெட் இங்க்ல அண்டர் லைன் பண்ணி வச்சுக்கங்க.அட ..வெறுமனே உடல் சம்பந்தப்பட்டது மட்டும் தான்னு வச்சுக்கிட்டாலும் அந்த உடல் தொடர்பான இயக்கத்துக்கு தேவையான அமைப்பு இருக்கனுமில்லையா?