துணை எழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்
எழுத்தாளர் சுஜாதா மீது எனக்கொரு பிரமிப்பு எப்போதும் உண்டு. சிங்கிள் காலம் ந்யூஸுக்கு மட்டுமே தகுதியுள்ள ஒரு சாதாரண என் கவுண்டரை கூட ஒரு அற்புதமான சிறுகதையாக மாற்றும் ஜாலக்கு சுஜாதாவுக்கு உண்டு. அவர் எழுத்துக்களில் வலிந்தோ, போகிற போக்கில் அவரையறியாதோ பிராமணீய விஷ விதைகள் கலந்தாலும் அவற்றை கண்டறியும் திறன் வந்துவிட்டதாலும், அவரை தாண்டி ஏராளமான எழுத்தாளர்கள், அவர் எழுத்துக்களை தாண்டியும் எழுத்துக்கள் உண்டு என்ற புரிதலாலும் சுஜாதாவின் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பதில் எனக்கேதும் கொள்கை