தனுஷ் கெஸ்ட் ஹவுஸ் தரை மட்டம்: வனத்துறை அதிரடி

Posted by S Murugesan - July 30th, 2014

பாபாரஜினியின் மருமகனான  தனுஷ் குற்றாலம்,வைதேகி நீர்வீழ்ச்சி அருகில் கட்டிய கெஸ்ட் ஹவுஸை இடித்து தள்ளியதன் மூலம் தமிழக வனத்துறை ரஜினியை சீண்டி பார்த்திருக்கிறது.
மற்ற மானிலங்களில் நிலைமை எப்படியோ தெரியாது.ஆனால் தமிழகத்தை பொருத்தவரை அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதை போல் முதல்வரின் கண்ணசைவு இன்றி எதுவுமே நடக்காது.
ரஜினி விஷயத்தில் ஆளுங்கட்சியின் மனவோட்டம் எப்படி இருக்கிறது என்பதை  எடைபோட  சமீப காலத்து  சில   நிகழ்ச்சிகள்  மூலம் ஓரளவு கணிக்கலாம்.
கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் ஜெ தனித்து போட்டியிட்டார். பா.ஜ.கவுடன் கூட்டோ -புரிதலோ -தேர்தலுக்கு பிறகு முடிவு என்ற நழுவலோ எதுவும் இல்லை.
தேர்தல் சமயம் மோடி ரஜினி வீட்டுக்கு வந்ததையும் -ரஜினி மோடிக்கு வக்காலத்து வாங்கி பேசியதையும் தலைமை நிச்சயம் ரசித்திருக்காது.
எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்தது போல ரஜினி கலைஞரின் பிறந்த நாளை சாக்கிட்டு சற்று தாமதமாகவேனும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததும் இதே கேட்டகிரி தான்.
இதை எல்லாம் மீறி தலைமை ஒரு படி இறங்கி வந்து நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம்  வழங்கும் விழாவுக்கு அனுமதி மறுத்து ஒரு வகையில்  பச்சை கொடி காட்டியது  . ஆனால் இந்த மேட்டர்ல ரஜினி மவுனத்தையே பதிலாக்கியது அனைவருக்கும் தெரியும்.
இதை தலைமை  ரசிக்கவில்லையா? இதனால் தான் இந்த சீண்டலா?
வனப்பகுதியில் கெஸ்ட் ஹவுஸ்  கட்டுவது என்றால் வனத்துறையினருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை. கட்டிக்கொண்டிருந்தபோது என்ன செய்தார்கள்?
சரி கெஸ்ட் ஹவுஸை இடிக்க முடிவு செய்தாலும் நோட்டீஸ், கீட்டீஸ்னு ஒன்னுமே இல்லாம அதிரடியா இடிச்சு தள்ளியிருக்காங்கன்னா ரஜினியை சீண்டி பார்க்க முடிவு செய்துட்டாங்கனு தான் சொல்லனும்.
விஜய்காந்த் கல்யாண மண்டப இடிப்பு அவரை அரசியலுக்கு இழுத்தது போல .. ரஜினியின் மருமகனுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் இடிப்பு ரஜினியை அரசியலுக்கு இழுக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Tags: , , ,

« Previous Entries